
மணிப்பூர் மக்கள் விடுதலை இராணுவம் மற்றும் மனிப்பூர் நாகா மக்கள் முன்னிலை ஆகிய இரு பயங்கரவாத இயக்கங்கள் மணிப்பூர் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளன.இந்த தாக்குதலில் 46 அஸ்ஸாம் ரைபிள்சின் கமாண்டிங் அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள செக்கான் எனும் கிராமத்திற்கு அருகே அதிகாரியின் வாகனம் சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கண்ணிவெடிகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது பயங்கரவாதிகளை வேட்டையாட மாபெரும் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.