பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கிராமங்களில் சர்வே நடத்தும் சீனா அதிர்ச்சி தகவல் !!

  • Tamil Defense
  • November 12, 2021
  • Comments Off on பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கிராமங்களில் சர்வே நடத்தும் சீனா அதிர்ச்சி தகவல் !!

சீன ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொண்ட குழுவினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கிராமங்கள் மற்றும் ராணுவ நிலைகள் பற்றி சர்வே நடத்தி வருகின்றனர்.

இது எல்லை கட்டுபாட்டு கோட்டின் அருகேயுள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் பிரிவுகளை வலுப்படுத்த உதவும் திட்டத்தின் ஒரு பகுதி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் நான்கு டஜன் சீன ராணுவ குழுக்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கேல், ஜூரா, லீபா ஆகிய செக்டார்களில் இந்த பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகவும்,

எல்லை கட்டுபாட்டு கோடு அருகே நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்திய ராணுவ அதிகாரிகள் கூறும்போது மேற்குறிப்பிட்ட கேல் ஜூரா லீபா ஆகிய செக்டார்களில் இருந்து தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அதிகமாக ஊடுருவ செய்வதாக தெரிவித்தனர்.

மேலும் சீன ராணுவ குழுவினருடன் மொழிபெயர்ப்பாளர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்து உதவி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்திய எல்லையோரம் உள்ள பகுதிகளில் சீனா மாதிரி கிராமங்கள் அமைத்துள்ளதை போன்று பாகிஸ்தானும் செய்ய உதவுகிறதா எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.