பாராளுமன்ற நிலைக்குழு முன் கூட்டுபடைகள் தலைமை தளபதி, முப்படை தளபதிகள் ஆஜர்; 31 உறுப்பினர்களில் 11 எம்.பிக்கள் மட்டுமே பங்கேற்பு நாட்டின் பாதுகாப்பில் அரசியல்வாதிகளின் அக்கறை !!
பாதுகாப்பு துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு முன்பு கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், முப்படைகளின் தலைமை தளபதிகள் மற்றும் இதர மூத்த தளபதிகள் ஆகியோர் ஆஜராகினர்.
இந்த நிகழ்வின் போது பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு முப்படை அதிகாரிகள் தகுந்த விளக்கமளித்தனர்.
எல்லையோர உள்கட்டமைப்பு தேச பாதுகாப்பு படைகளின் தயார்நிலை என பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் பல்வேறு சீர்த்தருத்தங்கள் தளவாட கொள்முதல் மேம்பாடு ஆகியவற்றை பற்றி விரிவாக எடுத்துரைத்தார் என நிலைக்குழுவின் தலைவர் ஜூவால் ஒரம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 31 பேர் கொண்ட குழுவில் வெறுமனே 11 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர், இது நாட்டின் பாதுகாப்பில் நமது அரசியல்வாதிகளுக்கு இருக்கும் அக்கறையின்மையை காட்டுவதாக உள்ளது.
பாதுகாப்பு துறைக்கான நிலைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு உள்ளது, ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டி காட்டவே இந்த குழு அமைக்கப்பட்டது.
மேலும் பாதுகாப்பு துறையில் இருந்து பணியாற்றி ஒய்வு பெற்ற எம்.பிக்கள் பெரும்பாலும் இல்லை ஹரியானாவை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் டி பி வாட்ஸ் மட்டுமே இந்த குழுவில் இருக்கும் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார்.