மழைக்காலம் முடிவு நக்சல் பகுதிகளில் காஷ்மீர் போன்ற தீவிர நடவடிக்கைக்கு துணை ராணுவம் தயார் !!

  • Tamil Defense
  • November 3, 2021
  • Comments Off on மழைக்காலம் முடிவு நக்சல் பகுதிகளில் காஷ்மீர் போன்ற தீவிர நடவடிக்கைக்கு துணை ராணுவம் தயார் !!

சட்டீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் மழைக்காலம் முடிவு பெற்றதையடுத்து நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் மிகப்பெரிய அளவில் அதி தீவிரமான நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுபற்றி மூத்த மத்திய ரிசர்வ் காவல்படை அதிகாரிகள் கூறும்போது கோப்ரா கமாண்டோ படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும்,

விரைவில் மிகப்பெரிய அளவில் காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்க எவ்வளவு தீவிரமாக ஆபரேஷன்கள் நடைபெறுகிறதோ அதே அளவுக்கு தீவிரமாக நக்சல்களை ஒடுக்க படையினர் தயாராக உள்ளதாக கூறினர்.

மேலும் நக்சல் எதிர்ப்பு போரில் ஈடுபட்டு வரும் பிற துணை ராணுவ படைகளான இந்தோ திபெத் எல்லைகாவல் படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவற்றிற்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய உள்துறை அமைச்சகம் பாராளுமன்றத்தில் நக்சல் ஆதிக்கம் சுமார் 70% குறைந்துள்ளதாகவும் பாதுகாப்பு படையினரின் உயிரிழப்பு 82% குறைந்து உள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டது.