பாகிஸ்தான் கடற்படையில் இணையும் சீன ஏவுகணை ஃப்ரிகேட் கப்பல் !!

  • Tamil Defense
  • November 3, 2021
  • Comments Off on பாகிஸ்தான் கடற்படையில் இணையும் சீன ஏவுகணை ஃப்ரிகேட் கப்பல் !!

பாகிஸ்தான் கடற்படையில் பி.என்.எஸ் துக்ரில் எனும் ஆல்ஃபா வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஃப்ரிகேட் போர்க்கப்பல் ஒன்று இணைய உள்ளது.

இந்த போர் கப்பலானது சீனாவின் ஹோடாசிங் கப்பல் கட்டுமான தளத்தால் கட்டமைக்கப்பட்டது, இந்த படை இணைப்பு விழா சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 4000 டன்கள் எடை கொண்ட இந்த கப்பலால் மிக தீவிரமாக கப்பல் எதிர்ப்பு விமான எதிர்ப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறைகளில் ஈடுபட முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட், நீரடிகணைகள், ஏவுகணைகள், பிரங்கி, சக்திவாய்ந்த் ரேடார்கள், அதிநவீனமான போர் மேலாண்மை அமைப்பு ஆகியவற்றை இந்த கப்பல் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆகவே இந்த வகை கப்பல்கள் பாகிஸ்தான் கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.