பாகிஸ்தானுடைய அரசு மற்றும் ராணுவம் ஆகியவை பல்வேறு பயங்கரவாத குழுக்களின் அழுத்ததிற்கு அடிபணிந்து வருவதாகவும் தொடர்ந்து இந்தியாவில் நாசவேலைகளை தூண்ட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக பாகிஸ்தானுடைய உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து அந்நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஏதேனும் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தெஹ்ரிக் இ தாலிபான் தெஹ்ரிக் இ லப்பாயிக் பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பயந்து சிறையில் இருக்கும் அவற்றின் உறுப்பினர்களை விடுவிக்கவும், அவற்றை தடை செய்ய போவதில்லை எனவும் பாக் அரசு உறுதி அளித்துள்ளது.
ஆஃப்கனில் தாலிபான்களின் எழுச்சியை பாகிஸ்தான் கொண்டாடி வந்த நிலையில் தற்போது தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு பாகிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.