குஜராத் மீனவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படை துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 6 பேர் கடத்தல் !!

  • Tamil Defense
  • November 8, 2021
  • Comments Off on குஜராத் மீனவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படை துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் 6 பேர் கடத்தல் !!

குஜராத் மாநிலத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது பாகிஸ்தான் கடற்படையினர் அவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலில் ஒரு மீனவர் இறந்த நிலையில் மற்ற ஆறு மீனவர்களை பாகிஸ்தான் படையினர் கடத்தி சென்றுள்ளனர், படகையும் கொண்டு சென்றுள்ளனர்.

அதே போல மற்றொரு மீன்பீடி படகான ஜல்பாரி மீது மற்றொரு பாகிஸ்தான் கடற்படையின் படகு அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

இதனையடுத்து குஜராத் மாநில காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவங்கள் குஜராத் மாநிலத்தின் துவாரகா பகுதியில் உள்ள ஒகா டவுன் அருகேயுள்ள கடல் பகுதியில் நடைபெற்றுள்ளது.