துபாய் விமான கண்காட்சியில் தேஜாஸ் பங்கேற்பு-பொறாமையில் பாகிஸ்தானியர்கள் !!

  • Tamil Defense
  • November 17, 2021
  • Comments Off on துபாய் விமான கண்காட்சியில் தேஜாஸ் பங்கேற்பு-பொறாமையில் பாகிஸ்தானியர்கள் !!

துபாயின் அல் மக்தூம் விமான தளத்தில் நடைபெற்று வரும் துபாய் விமான கண்காட்சியில் நமது இலகுரக தேஜாஸ் பங்கு பெற்றுள்ளது.

இந்த கண்காட்சியில் பாகிஸ்தான் மற்றும் சீன கூட்டு தயாரிப்பான ஜே.எஃப்-17 விமானமும் பங்கு பெற்றுள்ளது, இந்த நிலையில் தேஜாஸ் சற்றே அதிகமான வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதனால் பாகிஸ்தானியர்களுக்கு பொறாமை தொற்றி கொண்டுள்ளது.தேஜாஸின் முக்கோண வடிவம் காரணமாக சமோசா என நக்கல் செய்து வருகின்றனர்.

சமோசாவிற்கு சாஸ் எங்கே என பல வாசகங்களை பயன்படுத்தி சமுக வலைதளங்களில் பாகிஸ்தானியர்கள் நக்கல் செய்து வருகின்றனர்.