பாகிஸ்தானுக்கு சீன ஆயுத ஏற்றுமதி பிராந்திய பாதுகாப்பு சமநிலைக்கு பாதிப்பு இந்திய கடற்படை தளபதி !!

  • Tamil Defense
  • November 27, 2021
  • Comments Off on பாகிஸ்தானுக்கு சீன ஆயுத ஏற்றுமதி பிராந்திய பாதுகாப்பு சமநிலைக்கு பாதிப்பு இந்திய கடற்படை தளபதி !!

இந்திய கடற்படையில் சமீபத்தில் ஐ.என்.எஸ். வேலா எனும் நான்காவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல் மும்பையில் நடைபெற்ற விழாவில் இணைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கலந்து கொண்டார் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது,

சீனா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருவது இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு சமநிலையை பாதிக்கும் எனவும்,

போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் என பெரிய தளவாடங்களையும் சீனா பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்கிறது இந்தியா இவற்றையெல்லாம் எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்றார்.

இந்த மாத ஆரம்பத்தில் தான் பாகிஸ்தான் கடற்படை வரலாற்றிலேயே மிகப்பெரிய அதிநவீன போர்க்கப்பல் ஒன்றை சீனாவிடம் இருந்து பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.