
இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக இந்திய கடற்படை அதிகாரியான கமாண்டர் குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது அனைவரும் அறிந்ததே.
ஆனால் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது. ஒய்வு பெற்ற கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவை ஈரானிலிருந்து சட்ட விரோதமாக கடத்தியதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க பாகிஸ்தான் பாராளுமன்றம் குல்பூஷன் ஜாதவுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது.
இதன் காரணமாக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து குல்பூஷன் ஜாதவால் எந்த பாகிஸ்தானிய நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.