ஷாஹீன் 1-ஏ அணுஆயுத ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான்

ஷாஹீன்-1ஏ என்ற தரை-தரை ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வியாழக்கிழமை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

“ஆயுத அமைப்பின் சில வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களை மீண்டும் சரிபார்க்கும் நோக்கில் சோதனை நடத்தப்பட்டது” என்று பாக் இராணுவம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஏவுகணையின் எந்த தொழில்நுட்ப விவரங்களையும் ராணுவம் பகிர்ந்து கொள்ளவில்லை.

இந்த சோதனை strategic forces command படையின் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்டுள்ளது.

விமான சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த கமாண்டின் தலைமை அதிகாரி; அவர்களின் தொழில்நுட்ப திறமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டினார்.

ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் மற்றும் மூத்த ராணுவத் தலைவர்களும் இந்த சாதனைக்காக விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மார்ச் மாதம், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் 1-ஏ நடுத்தர தூர ஏவுகணையை ஆயுதப்படைகள் வெற்றிகரமாக சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.