
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் உள்ள அல் மக்தூம் விமானப்படை தளத்தில் மிகப்பெரிய விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இதில் நமது சொந்த தயாரிப்பான இலகுரக தேஜாஸ் போர் விமானம் நிறுத்தப்பட்டு இருந்த நிலைக்கு மரியாதை நிமித்தமாக பாகிஸ்தான் விமானப்படை அதிகாரிகள் சென்றனர்.
அப்போது அவர்கள் தேஜாஸ் போர் விமானத்தின் விமானி அறையை அருகில் சென்று பார்வையிட்டனர் இது பலத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது.
எதிரி நாட்டவர்களை அருகில் அனுமதித்ததே தவறு என ஒரு சாராரும்
ஆனால் வெறும் விமானி அறையை பார்வையிட்டதில் ஒன்றுமில்லை என ஒரு சாராரும் வாதிட்டு வருகின்றனர்.