தைவானை திணறடிக்கும் சீன போர் விமானங்கள்
கிட்டத்தட்ட 150 சீன இராணுவ விமானங்கள் அதன் வான்வெளிக்குள் நுழைந்ததாக தைவான் தகவல் வெளியிட்டுள்ளது.
தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த 27 சீன விமானங்களை எச்சரிக்க தைவானின் விமானப்படை விமானங்கள் அனுப்பப்பட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
சீன அதிபர் ஷின்பிங் தனது உயர்மட்ட ஜெனரல்களை சந்தித்த பிறகு
தைவான் ஜலசந்தி முழுவதும் பதட்டங்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி நான்கு நாள் ( தொடர்ச்சி இல்லை) காலப்பகுதியில், கிட்டத்தட்ட 150 சீன இராணுவ விமானங்கள் தனது வான்வெளிக்குள் நுழைந்ததாகக் தைவான் கூறியுள்ளது. தைவான் கண்காணிப்பு மற்றும் ரோந்துகளில் தற்போதுஅதிக கவனம் செலுத்தி வருகிறது.
சமீபத்தில் 18 போர் விமானங்கள் மற்றும் ஐந்து அணுசக்தி திறன் கொண்ட எச்-6 குண்டுவீச்சு விமானங்களும், வழக்கத்திற்கு மாறாக, ஒய்-20 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களும் தைவான் அருகே பறந்ததாக தைவான் அமைச்சகம் தெரிவித்துள்ளது.