
தொடரும் பயங்கரவாத சம்பவங்களால் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் ராணுவம் துணை ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக விளங்கியது.
தொடர்ந்து நடைபெற்று வந்த என்கவுன்டர்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வீரர்களின் வீர மரணங்கள் ஆகியவை இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் மருத்துவ பணியாளர்கள் என மைனாரிட்டி மக்கள் பின்னர் பிற மாநிலத்தவர் மீதான தாக்குதல்களால் பாதுகாப்பில் பெரும் சவால் உண்டானது குறிப்பிடத்தக்கது.