
இந்திய மற்றும் நேபாள ராணுவ தளபதிகளுக்கு இரு நாடுகளும் தங்களது ராணுவத்தின் கவுரவ தளபதி அந்தஸ்தினை வழங்குவது நடைமுறையாகும்.
அந்த வகையில் நேபாள ராணுவத்தின் தலைமை தளபதியான ஜெனயல் பிரபு ராம் ஷர்மாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந்த அந்தஸ்தை வழங்கி கவுரவித்தார்.
அதேபோல கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் நரவாணேக்கு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேபாள ராணுவத்தின் கவுரவ தளபதி அந்தஸ்து அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1950ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நடைமுறை இன்று வரையிலும் புழக்கத்தில் இருப்பது என்பது கூடுதல் தகவல் ஆகும்.