மீண்டும் எல்லையோரம் தகராறு; மூன்று இந்திய கிராமங்களை உரிமை கோரும் நேபாளம் !!
1 min read

மீண்டும் எல்லையோரம் தகராறு; மூன்று இந்திய கிராமங்களை உரிமை கோரும் நேபாளம் !!

நேபாளம் மீண்டும் எல்லையில் தகராறு செய்து வருகிறது, ஏற்கனவே இந்தியாவின் கலாபனி, லிபுலேக் மற்றும் லிபியமதுரா ஆகிய பகுதிகளை தனக்கு உரியது என உரிமை கோரி சட்டமும் நிறைவேற்றியது.

தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மூன்று இந்திய கிராமங்களை நேபாளம் உரிமை கோரி உள்ளது அதாவது நேபாளத்தின் கணக்கெடுப்பு முகமையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த கிராமங்கள் நேபாளத்திற்கு சொந்தமானது எனவும் ஆனால் அவற்றை இந்தியா ஆக்கிரமிப்பு செய்து படைகளை நிறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய இந்திய நேபாள எல்லையை பாதுகாக்கும் சஷாஸ்திர சீமா பல் படையின் அதிகாரி ஒருவர் இந்த மூன்று கிராமங்களும் இந்திய பகுதிகள்,

அங்கு வாழும் மக்கள் அனைவரும் இந்திய நாட்டின் குடிகள் ஆவர் ஆகவே நேபாள அதிகாரிக்ளை கணக்கெடுப்பு எடுக்க அனுமதிக்க முடியாது என்றார்.