
ஜார்கண்ட் மாநிலத்தின் லதேஹார் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலையில் மாவோயிஸ்டுகள் ரயில் பாதை ஒன்றை குண்டுவைத்து தகர்த்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு ரிச்சுகுட்டா மற்றும் டெமு ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்றுள்ளது என பலாமூ ரேஞ்ச் கொண்டு காவல்துறை ஐஜி தெரிவித்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக பர்காகானா மற்றும் கர்வாஹ் இடையிலான ரயில்சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.