
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது குறைந்தது ஒன்பது கொடிய தாக்குதல்களில் ஈடுபட்ட நக்சல் இயக்க கமாண்டர் வெள்ளிக்கிழமை மாலை என்கவுன்டரில் வீழ்த்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட நக்சல் பஸ்தா பீமா தலைக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு தொகையை அறிவித்திருந்தனர்.மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) காவல்துறை மற்றும் சிஆர்பிஎப்பின் எலைட் கோப்ராவின் 201 பட்டாலியன் ஆகியவற்றின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது டாட்மெட்லா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் இரவு 7 மணியளவில் துப்பாக்கிச் சண்டை நடந்தது என்று சுக்மா காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் சர்மா தெரிவித்தார்.
ராய்ப்பூரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள டாட்மெட்லா அருகே வனப்பகுதியை ரோந்து குழுவினர் சுற்றி வளைத்த போது, அவர்கள் மீது நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.துப்பாக்கிகள் சத்தம் ஓய்ந்த பிறகு, பஸ்தா பீமாவின் உடல் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டது.மார்ச் 2020 இல் மின்பா தாக்குதலில் 17 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டது மற்றும் கடந்த ஆண்டு நவம்பரில் சிந்தல்நார் பகுதியில் நடந்த ஐஇடி குண்டுவெடிப்பு உட்பட பல சம்பவங்களில் பீமா ஈடுபட்டுள்ளார், இதில் கோப்ரா உதவி கமாண்டன்ட் கொல்லப்பட்டார் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர் என்று சர்மா கூறினார்.
மின்பா தாக்குதலின் போது மாவோயிஸ்ட் குழுவை முன்னின்று வழிநடத்திச் சென்ற நக்சல்களில் பீமாவும் இருந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.”காவல்துறை நீண்ட காலமாக அவரைத் தேடிக்கொண்டிருந்தது,” என்கவுன்டர் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த பெரும் வெற்றி என்று எஸ்பி கூறியுள்ளார்.