
நாய்ப் சுபேதார் நரேந்தர் சிங் (இப்போது சுபேதார்) எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே ஊடுருவலைத் தடுக்க நிலைநிறுத்தப்பட்ட படைப்பிரிவில் இருந்தார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பணி செய்யும் போது, அவரது கண்காணிப்புப் பிரிவினர், கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவும் நோக்கத்துடன் அதிக ஆயுதம் ஏந்திய எதிரிகளின் நகர்வைக் கண்டறிந்தனர். நாய்ப் சுபேதார் நரேந்தர் ஒரு துணிச்சலான மற்றும் தேர்ந்த தந்திரோபாய நகர்வின் மூலம் தனது அணியை அடர்ந்த மற்றும் ஒரு குறுகிய கண்ணிகள் புதைக்கப்பட்ட பகுதி வழியாக பாதுகாப்பாக இருண்ட இரவில் வழிநடத்தி சென்றார்.
அவர் விரைவான சிந்தனையை வெளிப்படுத்தி எதிரிகளின் எதிர்பார்க்கப்படும் நுழைவு வழிகளில் தனது அணியை நிறுத்தினார்.
அவர் தனது நண்பரான ஹவில்தார் பால் சிங்குடன் இணைந்து அடுத்தகட்ட நகர்விற்கு தயாரானார்.இதனை அடுத்து நடந்த துப்பாக்கிச் சண்டையில், அவர் இரண்டு பயங்கரவாதிகளை மிக நெருக்கமாக சண்டையிட்டு சுட்டுக் கொன்றார் மற்றும் மற்றொருவரை காயப்படுத்தினார்.
அவரது மிகவும் வெளிப்படையான துணிச்சல், தந்திரோபாய புத்திசாலித்தனம் மற்றும் போரில் சிறந்த தலைமைத்துவத்திற்காக, நாய்ப் சுபேதார் நரேந்தர் சிங்கிற்கு “சௌரிய சக்ரா” வழங்கப்பட்டது.