நாட்டின் முதல் ஆயுதம் தாங்கிய ட்ரோன் உள்நாட்டிலேயே தயாரிப்பு !!

  • Tamil Defense
  • November 17, 2021
  • Comments Off on நாட்டின் முதல் ஆயுதம் தாங்கிய ட்ரோன் உள்நாட்டிலேயே தயாரிப்பு !!

மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரில் இருந்து செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று நாட்டின் முதலாவது ஆயுதம் தாங்கிய ட்ரோனை தயாரித்து வரலாறு படைத்துள்ளது.

Economic Explosives Limited (EEL) எனப்படும் அந்த நிறுவனமானது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் மற்றும் மிதவை குண்டுகளை தயாரித்துள்ளது.

இவற்றை திங்கட்கிழமை அன்று இந்திய கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் ராவத்துக்கு அந்த நிறுவனம் காட்சிபடுத்தியது.

அந்த நிறுவன அதிகாரிகள் கூறும்போது தங்களது தயாரிப்புகளை இந்திய எல்லையோரம் உள்ள எந்தவித நிலபரப்பிலும் பயன்படுத்தி கொள்ள முடியும் என்றனர்.

இவை தவிர அந்த நிறுவனம் ட்ரோன் எதிர்ப்பு ஏவுகணைகளையும் உருவாக்கி உள்ளது இவற்றால் Swarm droneகளை கூட அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.