
இந்திய கடலோர காவல்படையின் மூத்த அதிகாரிகள் பணி உயர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே டி.ஐ.ஜி அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் தனக்கான ஐ.ஜி அந்தஸ்திலான பணி உயர்வு முறைகேடு மூலமாக தடுக்கப்பட்டதாகவும்,
தனக்கு கீழே பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு ஐ.ஜி பணி உயர்வை வழங்கும் விதமாக இந்த முறைகேடு நடைபெற்றதாக முறையிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சரின் நேரடி தலையீட்டால் பணி உயர்வுகளுக்கான வாரியத்தின் முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகளுக்கான ACR கோப்புகளில் உள்ள தரவுகளை வைத்தே பணி உயர்களுக்கான மதிப்பெண்கள் இடப்படும் ஆகவே அந்த தரவுகளும் அழித்து எழுதப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர வரும் வருடங்களில் முறைகேடு செய்யும் வகையில் பல அதிகாரிகளின் ACR கோப்புகள் காணாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகவே தற்போது இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக அணுகி வருவதாக பாதுகாப்பு துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.