அருணாச்சலில் மி-17 வானூர்தி விபத்து

அருணாச்சல பிரதேசத்தில் எம்ஐ-17 ஹெலிகாப்டர் வலுக்கட்டாயமாக தரையிறங்கியதால் ஐஏஎப் வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் வியாழக்கிழமை தரையிறங்கியது. எம்ஐ17 ஐஏஎப் ஹெலிகாப்டர் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்ட பிறகு கட்டாயமாக தரையிறக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் இருந்த ஐந்து ஐஏஎப் வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆனால் இந்த சம்பவத்தில் அவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஐந்து பேரில் இரண்டு விமானிகள் மற்றும் மூன்று வீரர்கள் அடங்குவர்.

இந்த சம்பவத்திற்கான காரணங்களை அறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது விமானப்படை.