இந்திய கடற்படை அகாடமி பயற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற முதல் வெளிநாட்டு பாதுகாப்பு அமைச்சர் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு !!

இந்திய கடற்படை அகாடமியில் பயிற்சி நிறைவு விழாவில் மாலத்தீவு நாட்டின பாதுகாப்பு அமைச்சர் திருமதி. மரியா அஹமது தீதி பங்கேற்றார்.

இதன்மூலம் இந்திய கடற்படை அகாடமியின் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற முதலாவது வெளிநாட்டு பாதுகாப்பு அமைச்சர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.

இது தவிர மால்த்தீவு நாட்டின் முதலாவது பெண் வழக்கறிஞர் மற்றும் முதலாவது பெண் அமைச்சர் போன்ற சிறப்புகளுக்கும் சொந்தகாரர் ஆவார்.

கடந்த 23ஆம் தேதி 6 நாள் சுற்றுபயணமாக கொச்சி வந்த அவரை தெற்கு கடற்படையின் தலைமை பயிற்சி அதிகாரியான ரியர் அட்மிரல் பிரசன்னா வரவேற்றார்.

பின்னர் கொச்சி மற்றும் கண்ணூர் ஆகிய பகுதிகளில் தனது சுற்றுபயணத்தை முடித்து கொண்டு தனது குழுவினருடன் நேற்று மாலத்தீவுக்கு திரும்பி சென்றார்.