மலேசிய விமானப்படைக்கு தேஜாஸ் ?? 36 போர் விமானங்களுக்கான ஆர்டர் கிடைக்கும் வாய்ப்பு !!

  • Tamil Defense
  • November 18, 2021
  • Comments Off on மலேசிய விமானப்படைக்கு தேஜாஸ் ?? 36 போர் விமானங்களுக்கான ஆர்டர் கிடைக்கும் வாய்ப்பு !!

மலேசிய விமானப்படை இலகுரக போர் விமானங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு தற்போது விமானத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்த தேர்வில் பங்கேற்றுள்ள நமது தேஜாஸ் விமானத்திற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், தற்போது முன்னனியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் பட்சத்தில் சுமார் 36 போர் விமானங்களுக்கான ஏற்றுமதி ஒப்பந்தத்தை இந்தியா பெறும் இதன் மூலம் சர்வதேச ஆயுத சந்தையில் இந்தியா வலுவாக காலடி எடுத்து வைக்கும்.

ஒரு தேஜாஸ் விமானத்தின் விலை 309கோடி தான் ஆனால் அது இந்திய விமானப்படைக்கான பிரத்யேக தயாரிப்பு ஆகும்.

எனினும் உலகளவில் ஏற்றுமதிக்கான போர் விமானங்களில் தேஜாஸின் விலை மிகவும் குறைவு இதுதவிர இதற்கான சர்வீஸ் அவரவர் தேவைக்கேற்ப செய்து கொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.