
லார்சன் அன்ட் டூப்ரோ குழுமத்தின் ஒரு பிரிவான L & T கன்ஸ்ட்ரக்ஷன் DRDO அமைப்பின் மிக முக்கியமான மையம் ஒன்றை கட்டுவதற்கான 2500 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இந்த மையமானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடைய விமான கட்டுபாட்டு அமைப்புகளுக்கான மேம்பாட்டு தளமாக இருக்கும் என கூறப்படுகிறது.
தரை தளத்திற்கு மேல் ஆறு தளங்கள் என மொத்தமாக 1.2 லட்சம் சதுர அடிகள் கொண்ட மையமான இது வெறும் நான்கே மாதங்களில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை ஆகும்.