
காஷ்மீரில் உள்ள எல்லைக் கோடு வழியாக ஊடுருவல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக நிறுத்தப்பட்ட சிறப்பு அதிரடி படைகளில் ஒன்றின் தலைவராக இருந்தார்.
எல்லைக் கோட்டில் இப்படியான ஒரு நாளில்
பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் பற்றிய தகவல்களை பெற்றபின், அவர் தனது குழுவை 36 மணிநேரம் தேடுதல் மற்றும் பதுங்கியிருந்து அழிக்கும் திட்டத்துடன் கடுமையான நிலப்பரப்பில் மற்றும் கடினமான வானிலை நிலைமைகளின் கீழ், கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் வழிநடத்தினார்.அவரும் அவரது குழுவினரும் இந்த நடவடிக்கையின் போது நான்கு பயங்கரவாதிகளைக் கொன்றனர்.
ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை 36 மணிநேரம் தேடி தனது அணியை வழிநடத்தியதற்காக லெப்டினன்ட் கலோனல் ராவத்துக்கு வீரப் பதக்கம் வழங்கப்பட்டது.அவர் இரண்டு பயங்கரவாதிகளின் மறைவிடத்தை மிகச் சரியாக கணித்து குறிப்பிட்ட பின், வீரர்கள் பயங்கரவாதிகளை வெற்றிகரமாக வீழ்த்தினர்.
அவர் எதிரியின் பதிலடித் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக தனது குழுவை வழிநடத்தினார், பின்னர் மீதமுள்ள பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்தார், அவர்களில் இருவரை வீழ்த்தி, மற்றவர்களை கடுமையாக காயப்படுத்தினார்.
இதற்காக சௌரிய சக்ரா விருது பெற்றார்.