காஷ்மீரில் அப்பாவி வியாபாரியை கொன்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கைது, பாக் தொடர்பு அம்பலமானது !!
1 min read

காஷ்மீரில் அப்பாவி வியாபாரியை கொன்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கைது, பாக் தொடர்பு அம்பலமானது !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்த மாத ஆரம்பத்தில் மொஹம்மது இப்ராஹீம் அஹமது எனும் வியாபாரியை ஶ்ரீநகரில் பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர்.

தற்போது இந்த வெறி செயலில் ஈடுபட்ட மூன்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாதிகள் மூவரும் புல்வாமா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர், பாகிஸ்தானில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவுகளின்படி இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 38 பயங்கரவாதிகள் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் இவர்களில் 27பேர லஷ்கர் மற்றும் 11 பேர் ஜெய்ஷ் ஆகிய இயக்கங்களின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.