
மறைந்த லான்ஸ் நாயக் சந்தீப் சிங்குக்கு 2022 ஆம் ஆண்டுக்கான சௌர்ய சக்ரா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை வழங்கினார். அவரது மனைவி குர்பிரீத் கவுர் விருதை பெற்றார்.மறைந்த சந்தீப் சிங் 4 பாரா சிறப்புப் படையில் இருந்தார் மற்றும் 2018 இல் தேசத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லான்ஸ் நாயக் சந்தீப் சிங்கிற்கு திங்களன்று சௌர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது, ராணுவத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை சற்று திரும்பிப் பார்ப்போம்.
தங்தாரில் ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது நாயக் சந்தீப் சிங், குப்வாராவில் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்தினார்.ஆனால் இந்த ஆபரேசனில் அவர் வீரமரணம் அடைந்தார்.
2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய இந்திய ராணுவத்தின் சிறப்புப் படையில் சந்தீப் சிங் அவர்களும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மேஜர் விபூதி சங்கர் அவர்களுக்கும் ஜனாதிபதி சௌரிய சக்ரா (வீரமரணத்திற்குப் பின்) வழங்கினார்.
ஐந்து பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி மற்றும் 200 கிலோ வெடிபொருட்களை கைப்பற்றிய நடவடிக்கையில் மேஜர் விபுதி சங்கர் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதை மேஜரின் மனைவி லெப்டினன்ட் நித்திகா கவுல் மற்றும் தாயார் சரோஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
2019 பிப்ரவரியில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் மேஜர் வீரமரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சாப்பர் பிரகாஷ் ஜாதவுக்கு இரண்டாவது மிக உயர்ந்த அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ராவை (மரணத்திற்குப் பின்) வழங்கினார்.கீர்த்தி சக்ராவை சாப்பர் பிரகாஷ் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் பெற்றுக்கொண்டனர். ஜம்மு காஷ்மீரில் என்கௌன்டரின் போது வீரத்துடன் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியவர் சாப்பர் ஜாதவ் ஆவார்.

பாலகோட் வான்வழித் தாக்குதல் வீரரான இந்திய விமானப்படை வீரர் விங் கமாண்டர் (இப்போது குரூப் கேப்டன்) அபிநந்தன் வர்தமானுக்கு வீர் சக்ரா வழங்கப்பட்டது.அபிநந்தன் வர்தமானைத் தவிர, ஜம்மு காஷ்மீரில் ஒரு நடவடிக்கையின் போது ஏ++ வகை பயங்கரவாதியைக் கொன்றதற்காக நாய்ப் சுபேதார் சோம்பிருக்கு ஜனாதிபதி கோவிந்த் சௌரிய சக்ரா (மரணத்திற்குப் பின்) வழங்கினார்.
இந்த விருதை நைப் சுபேதார் சோம்பீரின் மனைவி மற்றும் தாயார் பெற்றுக்கொண்டனர்.
