2022ல் இந்தியாவுக்கான் Ka226T ரக ஹெலிகாப்டர்களின் தரச்சோதனை நிறைவடையும் ரஷ்யா !!

  • Tamil Defense
  • November 27, 2021
  • Comments Off on 2022ல் இந்தியாவுக்கான் Ka226T ரக ஹெலிகாப்டர்களின் தரச்சோதனை நிறைவடையும் ரஷ்யா !!

இந்தியா தனது சேட்டக் மற்றும் சீட்டா ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக ரஷ்யாவிடம் இருந்து Ka226T ரக ஹெலிகாப்டர்களை வாங்க முடிவு செய்துள்ளது.

இதற்கான தரச்சோதனைகள் வருகிற 2022ஆம் ஆண்டில் நிறைவடையும் என காமோவ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்ட்ரே போகின்ஸ்கி கூறியுள்ளார்.

ஏற்கனவே ரஷ்யா மற்றும் சிரியாவின் விமானப்படைகளில் பயன்பாட்டில் இருக்கும் Ka226 ரக ஹெலிகாப்டரின் முற்றிலும் மேம்பட்ட புதிய இந்தியாவுக்கான பிரத்யேக வடிவம் தான் இந்த Ka226T என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த Ka226T ரக ஹெலிகாப்டர்கள் இந்திய ரஷ்ய ஹெலிகாப்டர்கள் லிமிடெட் எனும் கூட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்படும், மேலும் இவற்றில் 33% சதவீத பாகங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும்.

இந்திய தரைப்படைக்கு 135 மற்றும் இந்திய விமானப்படைக்கு 65 என மொத்தமாக 200 Ka226T ரக ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.