
ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஜம்மு பிராந்திய ஏடிஜிபி முகேஷ் சிங் பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் நேரடி கள நிலவர ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ராணுவ அதிகாரிகள் துணை ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பயங்கரவாதிகளை ஒடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பயங்கரவாத ஆதரவாளர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறினார்.