காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்க தீவிரம் 3 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் கைது, 4 பேர் காலி !!

  • Tamil Defense
  • November 18, 2021
  • Comments Off on காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்க தீவிரம் 3 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் கைது, 4 பேர் காலி !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்க மிக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இதையடுத்து 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஜம்மு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையில் காஷ்மீருக்குள் நுழைந்த இன்னோவா கார் மடக்கி சோதிக்கப்பட்டது.

இதில் காரில் இருந்த 3 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர் அவர்களிடம் இருந்து சுமார் 42 லட்சத்திற்கும் அதிகமான பணம் கைபற்றப்பட்டு உள்ளது.

இவர்கள் குல்காமை சேர்ந்த ஃபயாஸ் அஹமது, புல்வாமாவை சேர்ந்த உமர் ஃபரூக் மற்றும் மொஹரம் பர்வேஸ் ஆகியோர், இவர்கள் 19-40 வயது கொண்டவர்கள் என தெரிகிறது.

இது தவிர ஹைதர்போராவில் நடைபெற்ற என்கவுன்டர் ஒன்றில் நான்கு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.