
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இருவரும் சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில் சீன தரப்பு தனது ஆதிக்கத்தை நிலை நாட்டும் வகையில் நடந்து கொண்டதாக தெரிகிறது.
சீனா புதிய தன்னம்பிக்கை மற்றும் உத்வேகத்துடன் செயல்பட்டு வருவதையும் அமெரிக்காவிற்கு எதிரான மற்றும் நிகரான சக்தியாக தன்னை பார்ப்பதையும் இது காட்டுகிறது.
மேலும் வல்லுனர்கள் கூறும்போது சீனா அமெரிக்காவுக்கு எதிராக நிகரான சக்தியாக தனது வரவை உலக அரங்கில் பறைசாற்றுவதாக கூறுகின்றனர்.