
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்ரோவின் மியூசியம் ஒன்றும் விண்வெளி மையம் ஆகியவை அமைய உள்ளன.
இதற்காக தமிழக அரசு 10 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இஸ்ரோ அமைப்பின் தலைவர் திரு. சிவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் பேசும்போது கொரோனா காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகவும் தற்போது பணிகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கும் மாவடத்தை சேர்ந்த மாணவ மாணவியரின் விண்வெளி சார்ந்த ஆவலை தூண்டுவதற்கும் இது பேருதவியாக அமையும் என்றார்.
இஸ்ரோ தலைவர் திரு. கைலாசவடிவு சிவன் அவர்களுடைய சொந்த மாவட்டம் கன்னியாகுமரி என்பது கூடுதல் தகவல் ஆகும்.