உலகிலேயே முதன்முறையாக இஸ்ரோவின் தன்னை தானே சாப்பிடும் ராக்கெட் மற்றும் காணாமல் போகும் செயற்கைகோள்கள் எதிர்கால தொழில்நுட்பம் !!

  • Tamil Defense
  • November 28, 2021
  • Comments Off on உலகிலேயே முதன்முறையாக இஸ்ரோவின் தன்னை தானே சாப்பிடும் ராக்கெட் மற்றும் காணாமல் போகும் செயற்கைகோள்கள் எதிர்கால தொழில்நுட்பம் !!

இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களின் சிந்தனையினால் உருவான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் (DTDI) இஸ்ரோவின் பல்வேறு எதிர்கால தொழில்நுட்ப திட்டங்களை செயலாற்றி வருகிறது.

அதன்படி சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சிவன் அளித்த பேட்டியில் பூமியில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் கடலில் விழுந்தோ அல்லது விண்ணில் தங்கியோ விடுகின்றன காலாவதியான செயற்கைகோள்களும் இதே நிலையை சந்திக்கின்றன.

இதன் காரணமாக பூமி குறிப்பாக கடல் மற்றும் விண்வெளி ஆகியவை கடுமையாக மாசடைகின்றன ஆகவே இதனை தடுக்க இஸ்ரோ உலகிலேயே முதல் முறையாக முயற்சி எடுத்து வருவகிறது எனவும்,

தன்னை தானே சாப்பிடும் ராக்கெட்டுகள் அதாவது சிறப்பு உலோகத்தால் கட்டமைக்கப்பட்ட இவை விண்ணில் தங்காது மாறாக பூமியை நோக்கி விழும் அப்போது வெப்பத்தின் காரணமாக முற்றிலும் எரிந்து சாம்பலாகி விடும் தன்மை கொண்டவையாக இருக்கும்,

மேலும் மாயமாகி விடும் செயற்கைகோள்கள் கோளாறு காரணமாகவோ அல்லது காலாவதி காரணமாகவே விண்ணில் தங்கி விடும் செயற்கைகோள்கள் பூமியை நோக்கி விழ வைக்கப்பட்டு வெப்பத்தால் எரித்து சாம்பலாக்கப்படும் எனவும்,

மேலும் சில சமயம் பல்வேறு சோதனைகள் நடத்தியும் சில விரிசல்கள் அல்லது சிறு துழைகள் காரணமாக ஏவப்படும் ராக்கெட்டுகள் விபத்தை சந்திக்கும் அதனை தடுக்கும் வகையில் தன்னை தானே குணமாக்கி கொள்ளும் உலோகங்களை பயன்படுத்தி ராக்கெட்டுகள் தயாரிக்கும் திட்டம் இருப்பதாகவும் கூறினார்.

க்வாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சியிலும் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது மே மாதம் நடைபெற்ற சோதனையில் 300 மீட்டர் தொலைவுக்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக தொடர்பு கொள்ள முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் பாதுகாப்பு துறை தொடங்கி அன்றாடம் சாமானியர்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் நிலை வரை இதன் பயன்பாடு இருக்கும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

DTDIன் தலைவர் விண்துறையின் செயலாளர் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானியான திரு. உமா மகேஸ்வரன் எனும் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.