
இஸ்ரேலிய கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் அவிவ் கோச்சாவி அந்நாட்டு பாராளுமன்றத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நிலைக்குழு முன்பு ஆஜராகி பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தார்.
அப்போது இஸ்ரேலிய ராணுவம் நிகழ்காலம் மற்றும் எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் ஒட்டுமொத்தமாக உருமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும்,
ஈரானால் ஏற்படும் அனைத்து அச்சுறுத்தல்களையும் சமாளிக்கும் விதமாக தயாராகி வருவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருவதாகவும்,
ஈரானுடைய அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் அந்நாட்டில் உள்ள அணுசக்தி சார்ந்த கட்டமைப்புகளை தாக்குவதற்கு இஸ்ரேலிய ராணுவம் தயாராகி உள்ளது எனவும் கூறினார்.
இஸ்ரேலின் பரம எதிரியான ஹெஸ்புல்லாஹ் இயக்கத்தின் தீவிர ஆதரவாளராக ஈரான் இருப்பதும் சிரியா லெபனான் ஈராக் போன்ற நாடுகளில் வான் பாதுகாப்பை வலுப்படுத்த உதவுவதும் குறிப்பிடத்தக்கது.