
இஸ்ரேல் தனது அதிநவீனமான SCORPIUS-G ஏசா மின்னனு போர் அமைப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்ய முன்வந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைப்பு கால்லியம் நைட்ரேட்டால் ஆன ஏசா ரேடாரை அடிப்படையாக கொண்டு செயல்படுவது ஆகும், இது தான் உலகிலேயே பல இலக்குகளை பல்வேறு அலைவரிசைகள் மற்றும் திசைகளில் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட மின்னனு போரியல் அமைப்பாகும்.
மேலும் இந்த அமைப்பானது மிக சக்தி வாய்ந்த உள்வாங்கும், வெளிப்படுத்தும் திறன்களை கொண்டுள்ளது இதனால் பல்வேறு இலக்குகளை ஒரே நேரத்தில் முடக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.
மேலும் உலகிலேயே இந்த ஸ்கார்பீயஸ்-ஜீ அமைப்பு தான் பல்வேறு இலக்குகளை வெவ்வேறு அலைவரிசைகள் மற்றும் திசைகளில் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட மின்னனு போரியல் அமைப்பாகும்.