
ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரத்தை கைபற்றியதுமே ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமும் எவ்வித தடையுமின்றி இயங்க தொடங்கியது.
காபூல் விமான நிலையத்தின் மீட்பு பணிகளின் போதே ஈவு இரக்கமற்ற முறையில் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்தது.
தற்போது ஆஃப்கனுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் டெபோரா லியோன் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் மிக மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் காபூலை தவிர அனைத்து மாகாணங்களிலும் பரவி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தாலிபான்களால் ஐ.எஸ் பயங்கரவாதிகளை அடக்க முடியவில்லை எனவும் ஐ.எஸ் இயக்கம் திணறி வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.