
தலைநகர் தில்லியில் இந்தியா பன்னாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசர்களை அழைத்து ஆஃப்கன் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நடத்துகிறது.
இந்த கருத்தரங்கில் ஏழு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டுனர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை தாங்கினார்.
ஈரானுடைய அட்மிரல் அலி ஷம்கானி, கஸகஸ்தானுடைய கரீம் மஸிமோவ், கிர்கிஸ்தானுடைய மராத் முகானோவிச் இமான்குலோவ், ரஷ்யாவின் நிகோலாய் பி பத்ருஷேவ்,
தஜிகிஸ்தானுடைய நஸ்ரூல்லோ ரஹ்மாத்ஜோன் மஹ்மூத்ஸோதா, துர்க்மேனிஸ்தானுடைய சரிமைராத் ககாலியேவிச் அமவோவ் மற்றும் உஸ்பெகிஸ்தானுடைய விக்டர் மக்முதோவ் ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உள்ளனர்.
இந்தியா இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள சீனா மற்றும் பாகிஸ்தானுக்கும் அழைப்பு அனுப்பியிருந்த நிலையில் இரண்டு நாடுகளும் இதில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளன, அதே நேரத்தில் ஆஃப்கன் தரப்பில் யாரும் அழைக்கப்படவில்லை.
ஆஃப்கன் பிரச்சினைகளில் நல்ல தீர்வு எட்டப்பட உதவும் வகையிலான இந்திய முயற்சியாகவே இந்த கருத்தரங்கு பார்க்கப்படுகிறது, இதில் மத்திய ஆசிய நாடுகளும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.