
சமீபத்தில் நான்காவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். வேலா மற்றும் விசாகப்பட்டிணம் ரக நாசகாரி கப்பலான ஐஎன்எஸ் விஷாகப்பட்டினம் ஆகியவை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த இரண்டு கப்பல்களும் தற்போது முறைப்படி இந்திய கடற்படையில் இணைந்து தங்களது சேவையை துவங்க உள்ளன. இதற்கான விழாக்கள் 21 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் கப்பலுக்கான விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஐ.என்.எஸ் வேலாவுக்கான விழாவில் கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் பங்கு பெற உள்ளனர்.
இவை இரண்டையுமே மும்பையில் அமைந்துள்ள மஸகான் கப்பல் கட்டுமான தளம் கட்டியமைத்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.