விரைவில் கடற்படையில் இணைய உள்ள அதிநவீன ஐ.என்.எஸ். வேலா நீர்மூழ்கி கப்பல் !!

  • Tamil Defense
  • November 2, 2021
  • Comments Off on விரைவில் கடற்படையில் இணைய உள்ள அதிநவீன ஐ.என்.எஸ். வேலா நீர்மூழ்கி கப்பல் !!

இந்திய கடற்படை ஃபிரான்ஸ் உதவியுடன் 6 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிகள் கப்பல்களை இந்தியாவிலேயே கட்டமைத்து படிப்படியாக படையில் இணைத்து வருகிறது.

ஏற்கனவே ஐ.என்.எஸ். கல்வாரி, ஐ.என்.எஸ். கல்வாரி, ஐ.என்.எஸ். காந்தேரி மற்றும் ஐ.என்.எஸ். கரன்ஜ் ஆகிய மூன்று ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் படையில் இணைந்துள்ளன.

அந்த வகையில் தற்போது நான்காவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வேலா விரைவில் படையில் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஐ.என்.எஸ். வேலா நீர்மூழ்கி கப்பலை மும்பை மஸகான் கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற உள்ள விழாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் திரு. சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு அடுத்ததாக ஐ.என்.எஸ். வாகிர் இறுதிகட்ட கட்டுமான பணிகளில் உள்ளது கடைசியான ஐ.என்.எஸ் வாக்ஷீர் ஆரம்பகட்ட பணிகளில் உள்ளது என கூறப்படுகிறது.

இந்த ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் டீசல் எலக்ட்ரிக் ரக கலன்கள் ஆனாலும் இவற்றால் கடல் பரப்பில் சீ டினையல் பணி அதாவது அத்துமீறும் எந்த வகை கப்பல்களையும் தடுத்து நிறுத்தி தேவைப்பட்டால் தாக்குதல் நடத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.