இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு இந்திராஜால் அசத்தலான சுதேசி தொழில்நுட்பம் !!

ஹைதராபாத் நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் க்ரீன் ரோபோட்டிக்ஸ் எனும் நிறுவனம் இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கி வருகிறது.

இந்திராஜால் என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பால் விமானப்படை தளங்கள் மற்றும் முக்கிய ராணுவ தளங்கள் இதர முக்கிய பகுதிகளை பாதுகாக்க முடியும்.

ஒரு இந்திராஜால் அமைப்பால் 1000-2000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியை பாதுகாக்க முடியும் எனவும் தானாகவே ட்ரோன்கள், மிதவை குண்டுகள் ஏவுகணைகளை தாக்கி அழிக்க முடியும் என கூறப்படுகிறது.

க்ரீன் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கோபி கிருஷ்ண ரெட்டி பேசுகையில் மொத்த மேற்கு எல்லையையும் பாதுகாக்க 300 அமைப்புகள் தேவைப்படும் ஆனால் இது பலத்த நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்,

ஆகவே செக்டார் வாரியாக ஒரு செக்டாருக்கு 6-7 இந்திராஜால் அமைப்புகளை நிறுவினாலே ஒட்டுமொத்த மேற்கு எல்லையையும் அவற்றின் தங்கு தடையற்ற தொடர்பின் மூலம் பாதுகாக்க முடியும் என்றார்.