விரைவில் இந்தியாவின் சொந்த ஏகே47 வெர்ஷன் துப்பாக்கி அறிமுகம் !!

  • Tamil Defense
  • November 2, 2021
  • Comments Off on விரைவில் இந்தியாவின் சொந்த ஏகே47 வெர்ஷன் துப்பாக்கி அறிமுகம் !!

உலகின் பல நாடுகள் ரஷ்யாவின் ஏகே ரக துப்பாக்கிகளை போன்றே தங்களது சொந்த வடிவங்களை தயாரித்து பயன்படுத்தி வருவது மட்டுமின்றி ஏற்றுமதியும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சீனா பல்கேரியா உக்ரைன் இஸ்ரேல் என பல நாடுகள் உள்ளன விரைவில் இந்தியாவும் அந்த பட்டியலில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூர் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் SSS DEFENCE எனும் தனியார் நிறுவனம் தான் தற்போது இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் சுமார் 6,00,000 ஏகே 203 ரக துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

SSS DEFENCE நிறுவனத்தின் தலைமை மேலாண்மை இயக்குனர் விவேக் கிருஷ்ணன் கூறும்போது உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் தரமானவையாக இருந்தால் அத்தகைய ஆயுதங்களின் இறக்குமதி தடை செய்யப்படும் எனும் அரசின் அறிவிப்பு நம்பிக்கை தருவதாகவும்,

அதன் காரணமாக ரஷ்ய துப்பாக்கிகளை விட பலமடங்கு அதிநவீனமான நியாயமான விலை கொண்டு மற்றும் அதே 7.62 ரக தோட்டாக்களை சுடக்கூடிய புதிய துப்பாக்கி விரைவில் வெளியாகும் என்றார்.

பனி போர் காலகட்ட தொழில்நுட்பங்களை கொண்ட ரஷ்ய தயாரிப்பை விடவும் இது பன்மடங்கு அதிநவீனமானது ரஷ்ய ஏகே203 துப்பாக்கிகளை சிறப்பு படைகள் பயன்படுத்தி கொள்ள முடியாது, ஏன் ரஷ்ய சிறப்பு படைகளே அதனை பயன்படுத்துவது இல்லை.

ஆனால் எங்களது இந்த ஆயுதம் சிறப்பு படைகளும் சரி வழக்கமான காலாட்படையினரும் சரி பயன்படுத்தி கொள்ள முடியும், சிறப்பு படைகளுக்கு ஒரு தனி வெர்ஷன் தயாரிக்கப்படும் இதில் அனைத்து விதமான கருவிகளையும் பொருத்தி கொள்ள முடியும் என்றார்.

மேலும் அவர் பேசும்போது இந்தியாவின் அரசு இயந்திரம் காரணமாக மிகவும் வேதனைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார், காரணம் உண்மையான ஆத்மநிர்பார் இங்கே இல்லை என்றார், அது உண்மையும் கூட !!!