அடுத்த 10 ஆண்டுகளில் 170 போர் கப்பல்கள் கொண்ட கடற்படையாகமாற இந்திய கடற்படை திட்டம் !!

  • Tamil Defense
  • November 17, 2021
  • Comments Off on அடுத்த 10 ஆண்டுகளில் 170 போர் கப்பல்கள் கொண்ட கடற்படையாகமாற இந்திய கடற்படை திட்டம் !!

அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 170 போர் கப்பல்கள் மற்றும் 320 வானூர்திகளை கொண்ட கடற்படையாக மாற்றம் பெற இந்திய கடற்படை திட்டம் தீட்டி வருகிறது.

இதற்கு முன்னர் 130 போர் கப்பல்கள் மற்றும் 230 வானூர்திகளை கொண்ட கடற்படையாக மாற இந்தியா திட்டமிட்ட நிலையில் அதிகரிக்கும் பாதுகாப்பு சவால்கள் காரணமாக திட்டம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது இந்திய கப்பல் கட்டுமான தளங்களில் சுமார் 39 போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் கட்டபட்டு வருகின்றன, மேலும் இரண்டு கப்பல்கள் ரஷ்யாவில் கட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி வைஸ் அட்மிரல் கோர்மாடே பேசும்போது உலகில் சூழல்கள் வெகு விரைவாக மாறும் காலத்தில் நாம் வாழ்கிறோம் அதிலும் இந்திய பெருங்கடல் பகுதி அதிக முக்கியத்துவம் பெறுவதாகவும் அவர் கூறினார்.

ஆகவே இந்தியா இந்த சமநிலையை மாறவிடாமல் தடுக்கும் வகையில் தனது பலத்தை அதிகரித்து கொள்வது அவசியம் என்றார்.