மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் ;பாசிட்டிவ் பதில் கிடைக்கும் என கடற்படை நம்பிக்கை !!

  • Tamil Defense
  • November 18, 2021
  • Comments Off on மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் ;பாசிட்டிவ் பதில் கிடைக்கும் என கடற்படை நம்பிக்கை !!

இந்திய கடற்படை மூன்று விமானந்தாங்கி கப்பல்களை இயக்க விரும்புகிறது, ஆகவே மீண்டும் ஒரு விமானந்தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டும் நிதி பற்றாக்குறை என அரசு ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த நிலையில் தற்போது உள்நாட்டில் முதல்முறையாக கட்டப்பட்ட விக்ராந்த் சேவையில் இணையும் தருவாயில் உள்ளது.

தற்போது இந்திய கடற்படை தனக்கு மூன்றாவது விமானந்தாங்தி கப்பலுக்கான அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் பேசும்போது மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் அத்தியாவசியம் என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையின் மூன்றாவது விமானந்தாங்கி கப்பலானது சுமார் 65,000 டன்கள் எடையுடன் தற்போது இருக்கும் விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்தை விட பல மடங்கு ராட்சதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.