
தற்போது சீன கடற்படையிடம் மிகப்பெரிய முன்னனி போர் கப்பல்கள் தொடங்கி மிகச்சிறிய கலன்கள் என அமெரிக்க கடற்படையை விட அதிக கலன்கள் உள்ளன.
மேலும் சீனா இரண்டாம் உலகப்போருக்கு குறிப்பாக சோவியத் ஒன்றியத்தின் முடிவுக்கு பிறகான உலகின் வல்லாதிக்கமாக திகழும் அமெரிக்காவை பின்தள்ள எண்ணுகிறது.
இதற்காக ராணுவ ரீதியாக குறிப்பாக தனது கடற்படையை மிகவும் வேகமாக நவீனப்படுத்தவும் வலுப்படுத்தவும் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் முப்படை தளபதிகள் பலர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஆஜராகி சீனா ஏற்கனவே விண்வெளி, சைபர் மன சுய நுண்ணறிவு திறன்களில் அமெரிக்காவை மிஞ்சி விட்டதாக எச்சரித்து உள்ளனர.
எனினும் ராணுவ ரீதியாக குறிப்பாக விமானப்டை மற்றும் கடற்படை வலிமையில் அமெரிக்கா மிகவும் வலுவாகவே உள்ளது, ராணுவ தொழிலுநுட்பத்திலும் அமெரிக்கா சிறப்பான இடத்தில் உள்ளது.
இப்படி கடலை ஆள்பவன் உலகை ஆள்வான் என்பதை உணர்ந்து அமெரிக்காவின் இடத்தை பிடிக்க சீனா செயலாற்றி வரும் நேரத்தில் இந்திய பெருங்கடல் பகுதி மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.
இதற்கு காரணம் இந்திய கடற்படை உலகளாவிய ரீதியில் கவனம் செலுத்தாவிட்டாலும் இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை சிறப்பாகவே நிலைநாட்டி உள்ளது.
2 விமானந்தாங்கி கப்பல்கள், 10 நாசகாரிகள், 13 ஃப்ரிகேட்டுகள், 23 கார்வெட்டுகள், 16 டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிகள், 1 அணுசக்தி ஏவுகணை நீர்மூழ்கி என இந்திய பெருங்கடல் பகுதியில் மிக மிக வலுவான நிலையில் உள்ளது.
இது தவிர பி8ஐ பொசைடான், எம்.ஹெச்60 ரோமியோ போன்ற உலகின் மிகச்சிறந்த கண்காணிப்பு மற்றும் தொலைதூர நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் மேலும் 1 விமானந்தாங்கி கப்பல், மிகப்பெரிய நாசகாரி கப்பல், கார்வெட்டுகள், ஃப்ரிகேட்டுகளை இணைக்க திட்டமிட்டு உள்ளது, தற்போது இந்தியா மற்றும் ரஷ்யாவில் 40க்கும் அதிகமான கப்பல்கள் கட்டுமானத்தில் உள்ளன.
போதா குறைக்கு சீனாவின் எரிபொருள் மற்றும் பிற ஏற்றுமதி இறக்குமதி ஆகியவை மலாக்கா ஜலசந்தியை கடந்து இந்திய பெருங்கடல் பகுதி வழியாக நடைபெறுகிறது.
இந்த மலாக்கா ஜலசந்தியை இந்திய கடற்படையின் பி8ஐ மிக்29 போன்ற விமானங்கள் கண்காணித்து வருகின்றன, மேலும் அந்தமானில் ஒரு படையணியே உள்ளது.
ஆகவே சீனா போரின் போது ஏதேனும் செயய் முனைந்தால் மலாக்கா ஜலசந்தியை பயன்படுத்தி சீன.கடற்படைய இந்திய கடற்படை ஜல சமாதி ஆக்கிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.