
இந்திய கடற்படை தற்போது தனது மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கான அனுமதியை பெற தீவிரம் காட்டி வருகிறது.
அந்த விமானந்தாங்கி கப்பலில் வழக்கமான போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா சண்டை விமானங்களும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இந்திய விமானப்படைக்காக நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஓர் ஆளில்லா சண்டை விமானத்தை உருவாக்கி வருகிறது.
ஆனால் இந்திய கடற்படைக்கான ஆளில்லா சண்டை விமானமானது மேற்குறிப்பிட்ட விமானத்தை விட ஆபத்தானதாக இருக்கும் எனவும்,
கடற்படையின் இரட்டை என்ஜின் போர் விமானத்தை விடவும் பெரியதாகவும் அதிக திறன்களை கொண்டதாகவும் இருக்கும் என நம்பதகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.