
சர்தார் பட்டேல் நினைவு கருத்தரங்கில் கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் ராவத் தேசத்தின் கட்டமைப்பில் ராணுவத்தின் பங்களிப்பு என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் ராணுவத்தை உதாசீனம் செய்வதையோ, புறக்கணிப்பதையோ தேவையின்றி விமர்சனம் செய்வதையோ தவிர்க்க வேண்டும் எனவும்,
ராணுவம் புறக்கணிக்கப்பட்டால் இந்த நாட்டை எதிரி நாடுகள் கூறுபோட்டு விடும், 1950களில் தேச பாதுகாப்பு தடம் புரண்ட போது 62ல் சீனா இந்திய நாட்டையே உலுக்கி போட்டது என்றார்.
மேலும் அவர் பேசும்போது ஆகவே வரலாற்றில் இருந்தும் கடந்த கால தவறுகளில் இருந்தும் படிப்பினைகளை பெற்று செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.