
இந்தியாவின் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் செக் குடியரசு நாட்டிற்கு சுற்றுபயணமாக சென்றுள்ளார்.
அங்கு செக் குடியரசின் தரைப்படை தலைமை தளபதியை சந்தித்து பேசினார், அப்போது இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் அவர் செக் குடியரசு நாட்டின் வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு துறை இணை அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.
முன்னதாக ஜெனரல் பிபின் ராவத் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டு விக்டோவ் தேசிய நினைகத்தில் அஞ்சலி செலுத்தினார்.
