பயங்கரவாத எதிர்ப்பு படையில் பெல்ஜியம் மெலினோய்ஸ் நாய்கள்; வீரர்கள் வரவேற்பு
1 min read

பயங்கரவாத எதிர்ப்பு படையில் பெல்ஜியம் மெலினோய்ஸ் நாய்கள்; வீரர்கள் வரவேற்பு

திறன் மிக்க மற்றும் பயிற்சி பெற்ற பெல்ஜியம் மெலினோய்ஸ் நாய்கள் பயங்கரவாத எதிர்ப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளன.இது அந்த படைக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

இந்த பெல்ஜியம் மெலினோய்ஸ் நாய்கள் தாக்கும் ரக நாய்கள் ஆகும் மற்றும் உலகில் பல்வேறு நாடுகளின் இராணுவத்தில் இந்த நாய்கள் உள்ளன.பலரக தாக்குதல்களுக்கென்றே சிறந்த பயிற்சி பெற்றவை இந்த நாய்கள்.

பாதுகாப்பு பணிகளில் சிறந்து விளங்க கூடிய பலவகை நாய் இனங்களில் இந்த பெல்ஜியம் மெலினோய்ஸ் நாய் இனமும் ஒன்று ஆகும்.தனது ஸ்டமினா, தாக்கும் திறன்,புத்திக்கூர்மை மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை காரணமாக பல்வேறு நாட்டு இராணுவங்களிலும் இந்த நாய்கள் உள்ளன.

ஒசாமாவை வீழ்த்த நடந்த ஆபரேசன் , ஐஎஸ் தலைவன் அபுபக்கர் அல் பக்தாதியை வீழ்த்த நடைபெற்ற ஆபரேசன் என இரண்டிலுமே இந்த நாய் இனம் பங்கு பெற்றது.ஜெர்மன் சேபர்டு போலல்லாமல் இவை சிறிய உடற்கட்டு கொண்டுள்ளதால் இவற்றை பாராசூட் ஆபரேசன்களில் பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் முதலில் சிஆர்பிஎப் படையும் பின்பு ஐடிபிபி மற்றும் NSG போன்ற படைகள் இந்த நாயை பயன்படுத்தி வருகின்றன.இது தவிர லேப்ரடார் ,ஜெர்மன் செபர்டு மற்றும் மலைப் பகுதிகளுக்கேன்றே பிரத்யேகமான கிரேட் ஸ்விஸ் மலை நாய்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.