
சீனாவுடனான எல்லை கட்டுபாட்டு கோட்டுக்கு அருகே பணியமர்த்தப்படும் அதிகாரிகளுக்கு திபெத் பற்றிய பயிற்சி பெறுவது கட்டாயமக்கப்பட்டு உள்ளது என்பதை அறிவோம்.
அந்த வகையில் தற்போது மேற்குறிப்பிட்ட எல்லை பகுதியில் பணியமர்த்தப்படும் அதிகாரிகளுக்கு பேச்சுவார்த்தை முறைகளில் பயிற்சி அளிக்க இந்திய ராணுவம் திட்டமிட்டு உள்ளது.
இதற்கு காரணம் சீனா மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு எல்லை பிரச்சினை மற்றும் ராணுவம் சார்ந்த பேச்சுவார்த்தைகளின் போது நமது இலக்கை வெற்றிகரமாக அடையும் நோக்கம் என கூறப்படுகிறது.
சீனர்களை பொறுத்தவரை பேச்சுவார்த்தைகளின் போது நீண்ட நேரம் இழுத்து எதிர் பக்கத்தை சோர்வடைய செய்து பின்னர் தங்களது நிலைபாட்டை ஆணித்தரமாக முன்வைப்பது போன்ற தந்திரங்களை கையாள்கின்றனர்.
இதுவரை இருதரப்புக்கும் இடையே 13 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது, மேலும் 10 மேஜர் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை, 51 பிரிகேடியர் மட்டத்திலான பேச்சுவார்த்தை, சுமார் 1450 தொலைபேசி அழைப்புகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.